உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா - ஐ.நா. பரபரப்பு தகவல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் மீது வான்வழியாக விமானம் மூலமாக வெடி குண்டு மழையை பொழிந்தது. மேலும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், சுமி உட்பட முக்கிய நகரங்களில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் தீவிரமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை 21 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 516 பேர் இத்தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். மேலும், 908 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.