ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் - ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள்.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது -
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடை விதித்து, அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும். உக்ரைன் மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும். ரஷ்யா வான்வழி, தரை வழி, கடல் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழியாக விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசுகையில், உக்ரைன் நாட்டிற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.