ரஷ்யாவுடன் நாங்கள் சமரசத்தில் ஈடுபட முடிவு எடுத்துள்ளோம்... - உக்ரைன் அதிபர் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோல்டிமிர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில்,
ரஷ்யாவுடன் நாங்கள் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும், நேட்டோவில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு இனி வலியுறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.