உக்ரைன் போரில் 16 வயது அழகிய மகளை அழுகிய நிலையில் கண்ட தாய் - கண்ணீர் வர வைக்கும் சம்பவம்
உக்ரைனில் புகைப்படத்தில் இருக்கும் இந்த 16 வயது அழகிய பெண்ணை ரஷிய ராணுவத்தினர் வேட்டையாடி ,கொலை செய்து வீசிய கொடுமை நடந்துள்ளது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர்.
உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்னொரு கொடுமை என்னவென்றால், இறந்து கிடக்கும் பிணங்களின் உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனின் புச்சாவில் 16 வயது டீன் ஏஜ் பெண் கரீனாவை காணாமல் போனார். அவர் தாயார் எங்கெல்லாம் தேடியும் மகள் கிடைக்கவில்லை.
இப்போரில் தன்னுடைய அழகிய மகளுக்கு என்னவாயிற்று என்று தெரியாமல் அந்தத் தாய் பரிதவித்து வந்தார். இந்நிலையில், புச்சாவில் கரீனா, ரஷ்ய வீரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இடிபாடுகளுக்கிடையே அப்பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட உக்ரைன் நாட்டு மக்கள் சிதைந்து போன சடலத்தை அவரின் தாயாரிடம் ஒப்படைத்தனர்.
அழகிய மகளின் அழுகிய உடலை பார்த்து தாயார் கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை துயரத்தில் உறையவைத்தது.
இந்த தகவலையும், கரீனாவின் புகைப்படத்தையும் உக்ரைன் எம்.பி லிசியா வசிலிங்கோ வெளியிட்டிருக்கிறார்.
தற்போது இந்தப் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
