உக்ரைனில் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது தாக்குதல் - 9 பேர் உயிரிழந்த பரிதாபம்
உக்ரைனின் ரிவ்னேயில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் நிலையில் ரஷ்யா தாக்குதலின் வேகத்தை அதிகப்படுத்தி வருகிறது. அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ரிவ்னேயில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது நடந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரிவ்னே மாகாண ஆளுநர் விட்டலி கோவல் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் இந்த தாக்குதலில் 9 பேர் மரணம், ஒன்பது பேர் காயமடைந்துள்ள நிலையில் இடிபாடுகளுக்கு நடுவில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Map of #Ukraine locating the humanitarian corridors agreed between Ukraine and Russia to allow the evacuation of civilians from areas hit by shelling. Updated as of March 14 #AFPgraphics @AFP pic.twitter.com/VRwQLKYFRS
— AFP News Agency (@AFP) March 14, 2022