உக்ரைனில் செய்தி ஒளிபரப்பின் போது வெடிகுண்டு வெடித்தது - அதிரவைக்கும் வீடியோ
உக்ரைனில் செய்தி ஒளிபரப்பின் போது திடீரென குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே உக்ரைனிலுள்ள மக்கள் தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள பதில் தாக்குதல் நடத்தும் நிலையில் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், உக்ரைனின் கீவ், கெர்சன், கார்கிவ் ஆகிய நகரங்களில் ரஷ்யா ஆக்ரோஷமான தாக்குதல் நடத்தி வருகிறது.
WATCH: 2 large explosions light up the Kyiv skyline as reporter goes off the air pic.twitter.com/MXlYuD8i6J
— BNO News (@BNONews) March 3, 2022
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில், செய்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தில் இருந்து செய்திகள் குறித்து வீடியோவினை பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது சற்று தூரத்தில் அவருக்கு பின்னால் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. அதன் ஒளி வெளிச்சம் கண்களை கூசும் வகையில் இருக்கும் நிலையில் அவர் செய்தி பதிவை நிறுத்துகிறார். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.