முதல் முறையாக போரை நிறுத்த அழைத்த ரஷ்யா - மறுப்பு தெரிவித்த உக்ரைன்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Sumathi Jan 06, 2023 10:54 AM GMT
Report

உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யா இறங்கி வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் 

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போர் 10 மாதங்களாக தொடர்ந்தபடி உள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரினால் இதுவரை 2 நாடுகளை சேர்ந்த 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக ஐ.நா சபை தெரிவித்து உள்ளது.

முதல் முறையாக போரை நிறுத்த அழைத்த ரஷ்யா - மறுப்பு தெரிவித்த உக்ரைன் | Ukraine Rejects Putins Ceasefire For Christmas

இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்து உள்ளார்.

மறுத்த உக்ரைன்

உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது, உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும்.

போர் முடிவு பிரகடனம் ரஷியாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷியாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை என கூறியுள்ளார்.