வெளிநாட்டினர் தப்பிச்செல்ல உக்ரைன் அரசு மறுக்கிறது - ரஷ்யா வெளியுறவுத்துறை

RussiaUkraineCrisis UkraineGovernment UkraineRefuses ForeignersToEscape
By Thahir Mar 03, 2022 10:21 AM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைன் தலைநகர் கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய துாதரகம் அறிவுறுத்தி வந்தது.

இதையடுத்து இந்தியர்கள் கார்கிவ் பகுதியை விட்டு வெளியேறி விட்டதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

மேலும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் நடந்து வந்தாவது பக்கத்து நாட்டு எல்லைகளுக்கு வந்துவிடுங்கள் என ஒன்றிய அரசு அறிவித்தது.

இதையடுத்து இந்திய மாணவர்கள் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேற அந்நாட்டு இரயில்களை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இரயில்களில் பயணிக்க அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்,பாதுகாப்பு படையினர் இரயிலில் ஏற அனுமதி வழங்குவதில்லை என தெரிவித்திருந்தனர்.

வெளிநாட்டினர் தப்பிச்செல்ல உக்ரைன் அரசு மறுக்கிறது - ரஷ்யா வெளியுறவுத்துறை | Ukraine Refuses To Allow Foreigners To Escape

இந்நிலையில் வெளிநாட்டினர் தப்பிச்செல்ல உக்ரைன் அரசு மறுத்து வருவதாக ரஷ்யா வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

ரஷ்யா நாட்டுக்கு எதிராக தெளிவான போர் திட்டங்களை உக்ரைன் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனுடன் இன்று கட்டாயம் பேச்சுவார்த்தை நடைபெறும் என ரஷ்யா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.