உக்ரைனின் கூட்டுப் படைகளின் தளபதி திடீர் பதவி நீக்கம் - அதிபர் ஜெலென்ஸ்கி அதிரடி...!

Volodymyr Zelenskyy Ukraine World
By Nandhini Feb 27, 2023 11:00 AM GMT
Report

உக்ரைனின் கூட்டுப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் திடீரென பதவி நீக்கம்ம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுப் படைகளின் தளபதி திடீர் பதவி நீக்கம்

உக்ரைனின் கூட்டுப் படையின் தளபதி மேஜர் ஜெனரல் எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நேற்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியால் பதவி நீக்கம் செய்ததாக சிஎன்என் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 2022 முதல் உக்ரேனியப் படைகளுக்கு மொஸ்கலோவ் தலைமை தாங்கினார். ஆனால், மொஸ்கலோவ் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இதுவரை எந்தவிதமான விளக்கம் அளிக்கவில்லை.

சமீப காலமாக உக்ரேனிய அதிகாரிகள் நாடு முழுவதும் ஊழல்களும், ஒடுக்குமுறைகளையும் தொடர்ந்து நடத்தினர். இதன் தொடர்ச்சியாக உயர்நிலையில் இருக்கும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

ஆனால், மொஸ்கலோவின் பணிநீக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதா இல்லையா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தனது முதல் பயணத்தின் போது, ​​400 மில்லியன் அமெரிக்க டாலர் உக்ரைன் உதவிப் பொதியில் கையெழுத்திட்டார். இந்த வார இறுதியில் உக்ரைனின் கிழக்கு லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளிலிருந்தும் கடுமையான ரஷ்ய ஷெல் தாக்குதல்கள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

ukraine-prez-zelenskyy-sacks-commander