உக்ரைன் அதிபர் திடீர் இங்கிலாந்து பயணம் - கடுப்பில் ரஷ்யா

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War England
By Sumathi Feb 09, 2023 06:06 AM GMT
Report

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரிட்டன் மற்றும் பிரான்சு நாடுகளுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

இங்கிலாந்து பயணம்

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

உக்ரைன் அதிபர் திடீர் இங்கிலாந்து பயணம் - கடுப்பில் ரஷ்யா | Ukraine Presidents Surprise Visit To England

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. சமீபத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

 ஆயுத உதவி

அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் உதவ ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் இங்கிலாந்து பயணம் சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ரிஷி சுனக்கின் அலுவலகம் உக்ரைனின் ஆயுதப் படைகளுக்கான பயிற்சியை கடல் மற்றும் வான்வழியாக விரிவுபடுத்தும் திட்டங்களை அறிவித்தது. அதேபோல் போர் ஜெட் விமானிகள் மற்றும் கடற்படையினர் உட்பட - மற்றும் இராணுவ உபகரணங்களை விரைவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவை சமாளிக்க அதிக ஆயுதங்கள் கோரி உக்ரைன் அதிபர் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.