உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : போருக்கு மத்தியில் போட்டோ ஷூட் சர்ச்சையாகும் புகைப்படம்

Volodymyr Zelenskyy Ukraine
By Irumporai Jul 28, 2022 05:41 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வோக் என்பது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மாதாந்திர ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் பத்திரிகையாகும். இப்பத்திரிகை 1892ஆம் ஆண்டில் ஒரு வாரப் பத்திரிகையாகத் துவங்கியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மாத இதழாக மாறியது.

சர்சையில் ஜெலன்ஸ்கி

இந்த இதழின் அட்டைப் படத்தில் ஏராளமான நடிகர்கள், இசைக் கலைஞர்கள், மாடல்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற முக்கிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த இதழ் 26 சர்வதேச பதிப்புகளைக் கொண்டிருக்கிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : போருக்கு மத்தியில் போட்டோ ஷூட்  சர்ச்சையாகும்  புகைப்படம் | Ukraine President Zelenskyy For Vogue Photoshoot

புகைப்படத்தால் வந்த வினை

தற்போது இந்தப் பத்திரிகை ஒரு சர்ச்சையில் சிக்கியது. உண்மையில் சர்ச்சையில் சிக்கியது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிதான். உக்ரைனில் பிப்ரவரி 24 முதல் ரஷ்யா கொடூரமாகத் தாக்கி வருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : போருக்கு மத்தியில் போட்டோ ஷூட்  சர்ச்சையாகும்  புகைப்படம் | Ukraine President Zelenskyy For Vogue Photoshoot

இதில் ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் துவங்கியதிலிருந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் பாராளுமன்றங்களில் உரையாற்றி ஆதரவு கேட்டு வருகிறார்.

ஆனல ,தற்போது பிரபல பத்திரிக்கைக்கு  தனது மனைவியுடன்  மாடலாக போஸ் கொடுப்பது, கொஞ்சம் கூட  நியாயம் இல்லை என பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.