உக்ரைன் அதிபரை கொல்ல புதிய திட்டம் போட்ட புடின் - வெளியான திடுக்கிடும் தகவல்..!

Zelensky UkrainerussiaWar RussiaUkraineCrissis Wagnergroup
By Thahir Mar 21, 2022 03:26 PM GMT
Report

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல கூலிப்படையை ஏவி விட்டதாக ரஷ்யா அதிபர் புடின் மீது ரஷ்யா உளவுத்துறை பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.இந்த தாக்குதலால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வரக்கூடிய நிகழ்வு அரங்கேறி வருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ்,கார்கிவ்,மரியுபோல் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் ரஷ்யா படைகள் தொடர் ஏவுகணை தாக்குதலையும்,குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்துகிறது.

இந்த தாக்குதலால் சுமார் 80 சதவீத கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல ரஷ்யா முயன்று வருவதாக உக்ரைன் தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவின் வேக்னர் கூலிப்படையினர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.