NATO எங்களுக்கு வேண்டாம்.. உக்ரைன் அதிபரின் திடீர் ட்விஸ்ட் ?
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும்,உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.
எனினும்,ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.இதனிடையே,ரஷ்யா போர் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கூறி வந்தாலும்,அதற்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்நிலையில்,நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையும் தனது மனநிலை மாறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் ஆர்வம் காட்டவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன்.
ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளை கருத்தில் கொண்டே உக்ரைனை தங்களது அமைப்பில் இணைத்து கொள்ள நேட்டோ அஞ்சுவதாக கூறிய ஜெலன்ஸ்கி இனி உக்ரனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம்.மேலும்,எதையும் காலில் விழுந்து கெஞ்சி பெரும் நாடாக உக்ரைன் இருக்காது.