அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை 3 நாட்டு பிரதமர்கள் சந்தித்தனர்

Met President of Ukraine சந்திப்பு Selensky 3 Prime Ministers உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி 3 நாட்டு பிரதமர்கள்
By Nandhini Mar 16, 2022 07:19 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.

இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொளி மூலம் பேசினார்.

அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைனுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் மனிதாபிமானமற்றது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை 3 நாட்டு பிரதமர்கள் சந்தித்தனர் | Ukraine President Selensky 3 Prime Ministers Met

இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ரயிலில் சென்று யுக்ரேன் அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கியை 3 நாட்டு பிரதமர்கள் சந்தித்துள்ளனர்.

நேற்று, போலாந்திலிருந்து யுக்ரேன் தலைநகர் கீயஃபிற்கு போலாந்து, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ரயில் மூலம் உக்ரைனுக்கு பயணம் செய்தனர்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்து பேசியுள்ளனர்.

கீயஃபில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், 3 நாட்டு பிரதமர்களும் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துள்ளது

உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. இப்பயணம் மிகவும் ஆபத்தானது என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கை பிறகும் 3 நாட்டு பிரதமர்கள் உக்ரைன் அதிபரை சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில் சென் குடியரசின் பிரதமர் கூறுகையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு விடுதலைக்காக போராடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

அப்போது உக்ரைன் அதிபர் பேசுகையில், 3 பிரதமரின் வருகை உக்ரைனுக்கு வலுவான ஆதரவு சேர்த்துள்ளது என்றார். இவர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த போது, தலைநகர் கீயஃபில் வெடிச்சத்தங்களை கேட்டது.