ப்ளீஸ் காப்பாத்துங்க...அமெரிக்க நாடாளுமன்றத்தில் கண் கலங்கிய உக்ரைன் அதிபர் - நடந்தது என்ன?

ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இன்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வீடியோ மூலம் உரை நிகழ்த்திய சம்பவம் உலக அரங்கில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நேட்டோ நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி இன்று பேசினார்.
அப்போது உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து உங்களிடம் பேசுவதில் மகிழ்ச்சியடைவதாகவும், இந்த நொடியும் கூட உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் நாங்கள் எந்த காலத்திலும் எங்கள் மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும், சாலைகளில் மக்களின் மரண ஓலம் கேட்பதை காண முடிவதாகவும் கூறினார்.
என் நாட்டை காக்க வேண்டும் என்ற என் கனவுக்கு உங்களுடைய உதவி தேவை. எங்கள் நாட்டு வான் பகுதியை நீங்கள் மூட வேண்டும். அங்கு விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் இந்த போர் முடிவிற்கு வரும். ஒருவேளை அது அமெரிக்க அதிபரால் முடியாவிட்டால் ஒரு உதவி செய்யுங்கள்.
விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் ஆயுதங்களை கொடுங்கள். எங்கள் நாட்டை நாங்கள் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.