“மீண்டும் வருக” - உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு

russia ukraine tirunelveli ukrainemedicalcollege ukrainenationalmedicalcollege
By Petchi Avudaiappan Mar 11, 2022 11:32 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

உக்ரைனில் உள்ள  மருத்துவ கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த 2 வாரங்களாக அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.


இதன் காரணமாக இந்திய அரசு உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த மனோ ஜெபத்துரை என்ற மாணவர் நேற்று சொந்த ஊர் வந்து சேர்ந்தார். 

இவர் அங்கு கார்கில் நகரில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவராக சேர்ந்துள்ளார். தற்போது ஊர் திரும்பிய அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் எவ்வாறு படிப்பை தொடர்வது என்ற கவலையில் இருந்த தனக்கு அறிவிப்பு ஒன்று கல்லூரியில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளார். 

அதன்படி  வரும் 20 ஆம் தேதிவரை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், மார்ச் 21 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.  இதனால் போர் முடிவடைந்து சில மாதங்களில் அங்கு சென்று படிப்பை தொடர முடியும் என நம்புவதாக மனோ ஜெபத்துறை தெரிவித்துள்ளார்.