ரஷ்யா உடன் அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரி படுகொலை - வெளியான திடுக்கிடும் தகவல்
உக்ரைன் - ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வந்தாலும் மற்றொரு புறம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
கடந்த 28-ந் தேதி அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் பங்கேற்ற உளவுத்துறை அதிகாரி டெனிஸ். கீவ் நகரில் உள்ள பெச்செர்ஸ்க் நீதிமன்றம் அருகே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதால்தான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இதை உக்ரைன் எம்பி அலெக்சாண்டர் டுபின்ஸ்கி உறுதிபடுத்தியுள்ளார்.
உளவுத்துறை அதிகாரி ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யபட்ட சம்பவம் உக்ரைன் நாட்டில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.