உக்ரைன் இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது - ரஷ்யா அதிர்ச்சி தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியேறும்படி இந்திய துாதரகம் உத்தரவிட்டிருந்து.
உக்ரைன் தலைவர் கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் பெசோசின்,பபாயி,பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய துாதரகம் கேட்டுக்கொண்டது.

இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெறும் சிரமத்தை சந்தித்து வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக திடுக்கிடும் தகவலை ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யா ராணுவ செய்தித் தொடர்பாளர் பேசுகையில்,உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் வலுகட்டாயமாக வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தியர்கள் பாதுகாப்பக வெளியேற்ற அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க ரஷ்யா ராணுவத்தினர் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இந்திய மாணவர்களை உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You May Like This