ரஷ்யாவின் முயற்சியை முறியடிக்க உக்ரைன் அரசு கையில் எடுத்த அதிரடி முடிவு

russia UkraineRussiaWar ukrainegovernment DefenceofUkraine ProPutin
By Petchi Avudaiappan Feb 26, 2022 09:27 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

தங்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை திசைதிருப்ப உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

உக்ரைன் தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது 3 நாட்களாக போர் தொடுத்து வருகிறது.

வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனும் தங்கள் நாட்டைக் காக்க பதிலடி கொடுத்து வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.  

உக்ரைன் நாட்டு தலைநகர் கீவிவை கைப்பற்ற ரஷ்யா போராடி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மக்கள் தங்கள் மாகாணங்களின் உள்ள சாலை குறியீடுகளில் இருந்து தெருக்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை அகற்றுமாறு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது எதிரியைக் குழப்பி திசைதிருப்பும் என்று கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் வாயிலாக மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் விரைவில் ரஷ்ய படைகளை விரட்ட நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.