ராணுவ வீரர் உடலிலிருந்து எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய கையெறி குண்டுகளை அகற்றிய மருத்துவர்...!

Ukraine Viral Photos
By Nandhini Jan 11, 2023 12:21 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ராணுவ வீரர் உடலிலிருந்து எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய கையெறி குண்டுகளை மருத்துவர் ஒருவர் வெற்றிகரகமாக அகற்றியுள்ளார். 

கையெறி குண்டுகளை அகற்றிய மருத்துவர்

உக்ரைனில் ஒரு ராணுவ வீரரின் உடலில் இருந்து எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய VOG கையெறி குண்டுகளை மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி உயிரை காப்பாற்றியுள்ளார். 

தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காயமடைந்த ராணுவ வீரருக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அறுவை சிகிச்சை எலெக்ட்ரோகோகுலேஷன் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால், கையெறி குண்டுகள் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும். ஆதலால் மிகவும் எச்சரிக்கையாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு ராணுவ வீரரின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

தற்போது இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் மருத்துவரின் தனித்தன்மையை புகழ்ந்து, பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். 

ukraine-doctors-successfully-surgery-vog-grenade