ரஷ்யா மீது தாக்குதலா ? விளக்கம் கொடுத்த உக்ரைன்

ukraine fuelattack
By Irumporai Apr 02, 2022 06:06 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ரஷ்யாவில் உள்ள எரிபொருள் சேமிப்பு நிலையத்தை தங்கள் நாட்டு ராணுவத்தினர் தாக்கியதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது.

பல்வேறு நாடுகளின் ராணுவ ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் பல முக்கிய நகரங்களை ரஷியா தாக்கி அழித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா எல்லையில் முதல்முறையாக உக்ரைன் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்தி வெளியனது .

அதாவது உக்ரைன் எல்லையில் உள்ள ரஷ்ய தலைநகரமான பெல்கோரோடில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கினை, உக்ரைன் படை ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. உக்ரைன் ரஷ்யா இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்குள் சென்று உக்ரைன் தாக்குதல் நடத்தியது பேசுபொருளானது.

ரஷ்யா  மீது தாக்குதலா ? விளக்கம் கொடுத்த உக்ரைன் | Ukraine Denies Attacking Fuel Depot Inside

உக்ரைனின் இந்த தாக்குதலால், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்படும் என ரஷ்ய அதிபர் மாளிகை கூறியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா எண்ணெய் கிடங்கு மீது தங்கள் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவ் கூறுகையில் "சில காரணங்களால் நாங்கள் தாக்குதல் தொடுத்ததாக ரஷ்யா கூறுகிறது. ஆனால் எங்கள் தகவல்களின்படி இது யதார்த்தத்துடன் ஒத்துப்போகவில்லை" என்று கூறினார்.

உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறுகையில், ரஷ்யாவில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை'' எனக் கூறியுள்ளார்.