அதிகரிக்கும் போர் பதற்றம் - துருப்புகளை நகர்த்தும் ரஷ்யா, அவசர நிலை பிரகடனம் அறிவித்தது உக்ரைன் அரசு
உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக எப்போது வேண்டுமானலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக்கூடும் சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களையும் ரிஷ்யா அங்கீகரித்துள்ளது.
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு நாடாளுமன்றத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா தனது துருப்புகளை நகர்த்தி வருகிறது.
உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில்தான் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன என்பதை செயற்கைக்கோள் படங்கள் தெளிவுப்படுத்துகின்றன.
இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.
ரஷ்ய படையெடுப்பு அச்சத்தின் மத்தியில் நாட்டை அமைதியாக வைத்திருக்கவும் அதன் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் சிறப்பு கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து, நாட்டின் பிற பகுதிகள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
இந்த உத்தரவு 30 நாட்கள் லரை அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் அவசர நிலை நீடிக்கப்படலாம் என்றும் உக்ரைன் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஓலேக்சி டனிலோஃப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலும் அரசின் அவசர நிலை பிரகடன அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.