உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு !

russiaukrainewar UkraineRussiaConflict
By Irumporai Feb 24, 2022 03:24 AM GMT
Report

உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன. ரஷ்யா உக்ரைன் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது .

உக்ரைனின் 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது ரஷ்யா. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன

.எந்த நேரத்திலும் ரஷ்யா போர்தொடுக்கலாம் என உக்ரைன் கூறி வந்த நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுப்பதை நிறுத்த வேண்டும்; இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்த ரஷ்யா வாய்ப்பு தர வேண்டும் - ஐநா பொதுச்செயலாளர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.