குண்டு மழையால் மக்கள் அலறல் - 20000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்ன? - மீட்க முடியாமல் விமானம் திரும்பியது

Ukraine-Bombing people-scream 20000-indians The-plane-returned ரஷ்யா-உக்ரைன் போர் விமானம் திரும்பியது மக்கள் அலறல்
By Nandhini Feb 24, 2022 07:32 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு மக்களிடையே பெரும் பதற்றமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். இந்தப் போரால் இந்தியாவில் பொருட்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு அதிகரித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவ படைகளை குவித்து, அங்கு ராணுவ பயிற்சி நடைபெற்ற தகவல்கள் வெளியானது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஆயுதங்களை குவித்தற்கு ஐநா, நேட்டோ, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

நேற்றைய தினம் உக்ரைனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு பகுதியில் ரஷ்யா ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு, அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து வருகிறது. உக்ரைனில், ராஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து, மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து விசாரித்து வருகிறது. உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள 20 ஆயிரம் இந்தியர்களின் கதி என்ன என்பது குறித்து அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியர்களை மீட்க ஏர் இந்திய விமானம் அனுப்பப்பட்டது. ஆனால், உக்ரைனில் குண்டு வீசப்பட்டு வருவதால், விமானங்கள் திருப்பி வந்துவிட்டது. இதனால், இந்தியர்களின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

குண்டு மழையால் மக்கள் அலறல்  - 20000க்கும் மேற்பட்ட இந்தியர்களின் நிலை என்ன? - மீட்க முடியாமல் விமானம் திரும்பியது | Ukraine Bombing People Scream 20000 Indians

இது குறித்து இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கூறியதாவது -

ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டிருக்கிறது. அதனால், உக்ரைன் நிலைமையை இந்தியாவால் சீர்செய்ய முடியும். உடனடியாக ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெலென்ஸ்கி ஆகியோரை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேச வேண்டும். 

தற்போதை நிலை என்ன என்று உக்ரைன் அதிபருடன், இந்திய பிரதமர் மோடி பேசி அறிந்து கொள்ள வேண்டும்

இவ்வாறு என்று தெரிவித்துள்ளார்.