உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு இடமாற்றம்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து ரஷ்யா படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவ படைத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்திய தூதரகம் உக்ரைன் நாட்டிலிருந்து போலந்து நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
