உக்ரைன் ராணுவ தளம் மீது ரஷ்ய படை சுற்றி வளைத்து பயங்கரத் தாக்குதல் - 35 பேர் பரிதாப பலி
Attack
Ukraine
Russian Army
Kills
உக்ரைன்
தாக்குதல்
ரஷ்ய படை
Army base
9 people
ராணுவ தளம்
By Nandhini
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவ படைத் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் ராணுவ தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.