ரஷ்ய விமானப் படைத் தாக்குதலில் 60 பேர் காயம் - லிவிங் மாகாண ஆளுநர்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது வான்வழியாக விமானம் மூலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், தரை வழியாகவும், கடல் வழியாகவும் மும்முனைகளிலிருந்து தாக்குதல் நடத்தியது.
உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று உக்ரைனின் முக்கிய நகரங்களை சுற்றி வளைத்து ரஷ்ய ராணுவ படைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இது குறித்து லிவிவ் மாகாண ஆளுநர் கூறுகையில், உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
