உக்ரைன் தலைநகரை நெறுங்கும் ரஷ்ய படைகள் : முழு பொதுமுடக்கம் அறிவித்தது அரசு

ukrainewar lockdowninkyiv 36hourslockdown
By Swetha Subash Mar 15, 2022 11:29 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.

அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

உக்ரைன் தலைநகரை நெறுங்கும் ரஷ்ய படைகள் : முழு பொதுமுடக்கம் அறிவித்தது அரசு | Ukraine Announces 36 Hour Long Lockdown In Kyiv

இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிக்கும் நிலையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலின் வேகத்தை அதிகப்படுத்தி வருகிறது.

அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் தொடர்ந்து கொடூர தாக்குதல் நடத்தி கைப்பற்றி வருகிறது.

உக்ரைன் தலைநகரை நெறுங்கும் ரஷ்ய படைகள் : முழு பொதுமுடக்கம் அறிவித்தது அரசு | Ukraine Announces 36 Hour Long Lockdown In Kyiv

உக்ரைன் தலைநகரை நெறுங்கும் ரஷ்ய படைகள் : முழு பொதுமுடக்கம் அறிவித்தது அரசு | Ukraine Announces 36 Hour Long Lockdown In Kyiv

வான்வழி, தரை வழி, கடல் வழியாக மும்முனைகளிலிருந்து தாக்குதல்களை ரஷ்ய படை நடத்தியதில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைனில் சிக்கிக்கொண்ட வெளிநாட்டு மக்கள் அவசர, அவசரமாக அந்தந்த நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.

கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கீவ் நகர் நோக்கி ரஷ்ய படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.