ரஷ்ய நிதித் துறையில் 50 ஆண்டு தடை - உக்ரைன் அரசு அதிரடி..!

United Russia Ukraine
By Nandhini Feb 24, 2023 10:38 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ரஷ்ய நிதித் துறையில் 50 ஆண்டு தடைகளை உக்ரைன் அரசு விதித்து அதிரடி காட்டியுள்ளது.

அதிபர் ஜோ பைடன் திடீர் பயணம்

ஒரு வருடமாக உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் திடீரென்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு பயணம் மேற்கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் கியேவில் சந்தித்து பேசினர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் சென்றார். கடைசி வரை அவருடைய பயண விவரம் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. போருக்கு மத்தியில் ஜோ பைடைனின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தத்திலிருந்து விலகிய ரஷ்யா

இதனையடுத்து, கடுப்பான ரஷ்யா அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உக்ரைன் பயணத்தையடுத்து, அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியது.

Start என்னும் இந்த ஒப்பந்தம் அமெரிக்கா, ரஷ்யா இடையே அணு ஆயுதங்களை குறைக்க வழிவகுக்கிறது. இந்த ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியுள்ளதால் இந்த விவகாரம் உலக மக்களால் உற்று நோக்கப்படுகிறது.

ukraine-50-year-sanctions-russian-financial-sector

ரஷ்ய நிதித் துறையில் தடை விதித்த உக்ரைன்

இந்நிலையில், ரஷ்ய நிதித் துறையில் 50 ஆண்டு தடைகளை உக்ரைன் விதித்துள்ளது. நேற்று உக்ரைனில் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தலைமையில் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய வங்கி, அனைத்து வணிக வங்கிகள், முதலீட்டு நிதிகள், காப்பீட்டாளர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது 50 ஆண்டு கால தடைகளை விதித்தது.

இந்த முடிவுக்கு 325 பிரதிநிதிகளில் பெரும்பான்மையானவர்கள் அரை நூற்றாண்டுக்கு நடைமுறையில் இருக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வங்கிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நிதி நிறுவனங்களை இந்த துறைசார் தடைகள் பாதிக்கும் என்று பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷ்ய கூட்டமைப்பின் நிதி நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துக்களுடன் பரிவர்த்தனைகளுக்குத் தடை, வணிக உறவுகளை நிறுவுவதற்கான தடை மற்றும் ரஷ்ய நிதி நிறுவனங்களில் பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளைத் தடை செய்தல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும், Svyrydenko கூறினார்.