பெட்ரூமில் படுத்துக்கொண்டே ரூ.1000 கோடி சம்பாதித்த காதலன் - ஐடியா கொடுத்த காதலி
காதலியில் வீட்டில் இருக்கும் படுக்கையில் படுத்துக் கொண்டே காதலன் சுமார் ரூ.1000 கோடி சம்பாதித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் அனைவருக்குமே பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே கனவாக இருக்கிறது. இதில் நிறைய திறமையோடு பணம் சம்பாதிக்க போராடுபவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் அதிர்ஷ்டம், குறுக்குவழி என பணம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டு நம்மை சுற்றி பலர் இருப்பதை காணலாம்.
இப்படி பணம் சம்பாதிக்கவே பலரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் ஒரு இளைஞர் காதலியின் படுக்கை அறைக்குள் வைத்து ரூபாய் ஆயிரம் கோடி சம்பாதித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு ஐடி ஊழியரான ஜானி பவ்பார்ஹேட் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தன் காதலியின் வீட்டில் சிக்கிக்கொண்டார். ஐடி ஊழியரான இவருக்கு எப்போதுமே அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரு அப்ளிகேஷனை தானே உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
ஆனால் அதற்கான நேரம் இல்லாததால் ஜான் அந்த எண்ணத்தை கடந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் காதலியின் வீட்டில் மாட்டிக்கொண்ட ஜானி தன் காதலியின் வீட்டின் அவரது பெட்டில் படுத்துக்கொண்டு ஒரு ஆப்பை டிசைன் செய்துள்ளார்.
அந்த ஆப்பிற்கு ஹோபின் என பெயரிட்டுள்ளார். இந்நிலையில் அந்த ஆப்பை அவர் ரிலீஸ் செய்த நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. இதுவரை அந்த ஆப்பை சுமார் 50 லட்சம் பேர் டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இதன் காரணமாக தற்போது ஜானி இங்கிலாந்து நாட்டின் 113வது பணக்காரராக மாறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜானி சில நாட்கள் முன்பு தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்று சுமார் ரூ.1000 கோடி பெற்றுள்ளார்.