நேட்டோ கூட்டமைப்பு மீது உக்ரைன் அதிபர் கடுமையான விமர்சனம் - பரபரப்பு
உக்ரைனால் இந்த போரில் தாக்கு பிடிக்க முடியாவிட்டால் ஐரோப்பாவாலும் அது முடியாது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார் .
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை நேட்டோ நிராகரித்த நிலையில், அந்த அமைப்பின் மீது செலன்ஸ்கியின் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதாவது ரஷ்யாவின் வான்வழி தாக்குதலை நேட்டோ நிராகரித்தன் மூலம் உக்ரைன் மீது மேலும் குண்டு மழை பொழிய நேட்டோ அனுமதித்துள்ளதாக செலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், உக்ரைனிற்கு ஆதரவாகவும் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யாவை வலியுறுத்தியும் பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் கூட்டங்கள் நடந்தன. ஆனால் தற்போது நடக்கும் போரில் உக்ரைன் தாக்குப்பிடிக்காவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றால் போர் ஐரோப்பா முழுவதும் பதற்ற நிலை உருவாகும். ஆகவே தான் உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்ததாக நேட்டோ படைகளில் செயலாளர் ஸ்டால்டன்பர்க் விளக்கம் கொடுத்துள்ளார். நேட்டோவுக்கும் உக்ரைன் அதிபருக்கும் இடையேயான இந்த கருத்து வேறுபாடு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.