வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை : சோதனை அடிப்படையில் களம் இறங்கிய இங்கிலாந்து

By Irumporai Jun 07, 2022 08:31 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை அதுவும் நூறு சதவீத ஊதியத்துடன் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

பொதுவாகவே இந்தியாவை எடுத்துக்கொண்டால் ஒரு சமானிய மனிதனின் வேலை நேரம் தற்போது 9 மணிநேரமாக உள்ள சில நிறுவனங்களில் மட்டும் தான் 8 மணி நேர வேலை வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை. மற்ற அலுவலகங்களில் 9 மணிநேர வேலை வாரத்தில் ஒரு நாள் விடுப்பு மற்ற நேரம் எல்லாம் வரும் கடுப்பு என்பதுதான் தற்போது இந்தியாவில் வேலைக்கு செல்லும் இளைஞர்களின் நிலை என்பதுதான் மறுக்க முடியாத நிலையாக உள்ளது.

வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை : சோதனை அடிப்படையில் களம் இறங்கிய இங்கிலாந்து | Uk Workers Biggest Trial Of Four Day Week

நான்கு நாட்கள் தான் வேலை

அதே போல் கொரோனா ஊரடங்கில் உலகமெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதியினை ஏற்படுத்தின ஆனால் கொரோனா தற்போது உரு மாறினாலும் அது உடனே குணமாகும் என்பதால் work from home- திட்டத்தை விலக்கின பல்வேறு நிறுவனங்கள், இந்த நிலையில் அயல் நாடுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களின் உழைக்கும் நேரத்தின் அளவினை குறைத்து வருகின்றன.

வாரத்தில் நான்கு நாட்கள் தான் வேலை : சோதனை அடிப்படையில் களம் இறங்கிய இங்கிலாந்து | Uk Workers Biggest Trial Of Four Day Week

இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த சோதனையில் பங்கெடுத்துள்ளன.

நூறு சதவீத ஊதியம்

இதன் மூலம் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற புரிதலின் பெயரில் அவர்களுக்கு 100 சதவீத ஊதியத்தை கொடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.

இந்த திட்டமானது தொழிலாளர்களின் நலனிலும் உற்பத்தி திறனை அதிகரிப்பதிலும் எந்த அளவிற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள். இந்த திட்டம் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்மை சேர்க்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.