வெவ்வேறு தந்தைக்கு பிறந்த இரட்டைச் சகோதரிகள்., DNA சோதனையில் உறுதி

United Kingdom
By Ragavan May 03, 2026 02:49 PM GMT
Report

பிரித்தானியாவில் (UK) ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை சகோதரிகள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

உலகளவில் மிக அரிதாக நடைபெறும் Heteropaternal Superfecundation எனப்படும் உயிரியல் நிகழ்வு, பிரித்தானியாவில் முதல் முறையாக பதிவாகியுள்ளது.

மிச்செல் (Michelle) மற்றும் லவினியா ஒஸ்போர்ன் (Lavinia Osbourne) என்ற இரட்டைச் சகோதரிகள், DNA சோதனையின் மூலம் தாங்கள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்த குழந்தைகள் என்பதை கண்டறிந்துள்ளனர்.

UK twins DNA test, Different fathers twins case, Heteropaternal superfecundation UK, Michelle and Lavinia Osbourne, Rare twin DNA discovery, BBC Radio 4 The Gift twins #Twins #DNA #UKNews #RareDiscovery #FamilySecrets #BBCTheGift #ScienceNews #MiracleTwin

BBC Radio 4-இன் The Gift நிகழ்ச்சியில் அவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

மிச்செல், தன் தந்தை ஜேம்ஸ் தான் உயிரியல் தந்தையா என்ற சந்தேகத்தால் DNA சோதனை செய்துள்ளார்.

அதில், ஜேம்ஸ் அல்லாமல் அலெக்ஸ் என்ற நபர் தான் தனது தந்தை என தெரியவந்தது.

UK twins DNA test, Different fathers twins case, Heteropaternal superfecundation UK, Michelle and Lavinia Osbourne, Rare twin DNA discovery, BBC Radio 4 The Gift twins #Twins #DNA #UKNews #RareDiscovery #FamilySecrets #BBCTheGift #ScienceNews #MiracleTwin

இதனால், லவினியாவும் DNA சோதனை செய்தார். ஆனால் அதில், அலெக்ஸ் கூட அவரது தந்தை அல்ல என தெரியவந்தது.

பின்னர், ஆர்தர் என்ற நபர் தான் லவினியாவின் தந்தை என உறுதி செய்யப்பட்டது.

இருவரும் தங்கள் தாயார் இந்த உண்மையை அறிந்திருந்தாரா என்ற கேள்விக்கு செல்லவில்லை. ஆனால், தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த அதிசயமான உண்மையை அவர்கள் பெருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த அரிதான நிகழ்வு உலகளவில் 20-க்கும் குறைவான சம்பவங்களில் ஒன்றாகும். பிரித்தானியாவில் இது முதல் முறையாக பதிவாகியுள்ளது.


#Twins #DNA #UKNews #RareDiscovery #FamilySecrets #BBCTheGift #ScienceNews #MiracleTwin