கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இங்கிலாந்து அங்கீகாரம்
கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள பைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு, அவசர கால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
அதே சம்யம் இந்தியா, துருக்கி, ஜோர்டான், தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், அவற்றைச் செலுத்திக் கொள்வோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்படுகின்றனர்.
இந்த நிலையில், 'இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டு தவணை செலுத்தியிருந்தாலும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பிரிட்டன் அறிவித்தது.இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று (செப்.,22) திருத்தப்பட்ட பயண ஆலோசனை பட்டியலை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. அதில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன் அங்கீகரித்துள்ளது.
அதன்படி பிரிட்டன் வரும் இந்தியர்கள் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பான சிக்கல் காரணமாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் இந்தியர்கள் இங்கிலாந்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்' என, தெரிவித்துள்ளது.