யாரு பண்ணாலும் தப்புத்தான் : பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த இங்கிலாந்து காவல்துறை
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீட் பெல்ட் அணியாத பிரதமர்
தற்போது பிரிட்டன் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் , நாட்டின் பொருளாதரத்தை மேம்படுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 க்கும் அதிகமான புதிய திட்டங்களை நேரடியாக பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த தனது காரில் அமர்ந்தபடி பேசியுள்ளார், அந்த வீடியோவில் அவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தது வீடியோவில் பதிவானது.

அபராதம் கட்டிய பிரதமர்
ஆகவே ஒரு நாட்டின் பிரதமரே சீட் பெல்ட் அணியவில்லை என வீடியோ வைரலானது , இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட ரிஷிசுனக் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது