நிகழ்ச்சியில் இறைச்சி உணவு; மன்னிப்பு கேட்ட பிரதமர் - என்ன காரணம்?

Diwali Festival England Keir Starmer
By Sumathi Nov 16, 2024 07:34 AM GMT
Report

தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் இறைச்சி பரிமாறப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தீபாவளி நிகழ்ச்சி

தீபாவளி கடந்த மாதம் 31ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

England PM

அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் இந்துக்கள் பலர் பங்கேற்றினர்.

மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்பி; அவ்வளவு ஆக்ரோஷம் - அதிரவைத்த வீடியோ!

மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்பி; அவ்வளவு ஆக்ரோஷம் - அதிரவைத்த வீடியோ!

வெடித்த சர்ச்சை

அதில் மதுபானம், இறைச்சி உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

Keir Starmer

இந்நிலையில், இறைச்சி உணவு, மதுபானம் பரிமாறப்பட்டது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்புக்கேட்டுள்ளது. இதுபோன்ற தவறு இனிவரும் காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.