என்னது மறுபடியும் கொரோனாவா? - மீண்டும் தனிமைப்படுத்தி கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

qurantine borisjohnson ukpm
By Irumporai Jul 18, 2021 11:52 AM GMT
Report

பிரிட்டன் சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா கொரோனா கட்டுப்படுத்த பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பணியில் இல்லாத போது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போதைய டெல்டா கொரோனா பரவலை பிரிட்டன் சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது பிரிட்டனில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் 10 நாள்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பிரிட்டனில் புதிய அலையின் மூலம் கொரோனா பரவி வரும் நிலையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும்திரும்பப் பெறப்படலாம் என அறிவித்துள்ளது.