இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் : வருகையின் நோக்கம் என்ன?

borisjohnson ukpm
By Irumporai Apr 17, 2022 03:27 AM GMT
Report

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வர உள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இரு முறை போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த இருமுறையும் கொரோனா பரவல் காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.

 இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் இருநாள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வர உள்ளார். பயணத்தின் முதல் நாளில் பொரிஸ் ஜான்சன் குஜராத் செல்கிறார். பயணத்தின் இரண்டாவது நாளான 22-ம் தேதி போரிஸ் ஜான்சன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 அதேபோல், உக்ரைன் போர் குறித்தும் அங்கு உள்ள நிலவரங்களும் குறித்து விவாதிக்கபடலாம் என கூறப்படுகிறது,.