இந்தியாவில் இருந்து நர்ஸ்களை இங்கிலாந்தில் வேலைக்கு எடுக்க முடிவு!
வெளிநாடுகளை சேர்ந்த 900 நர்ஸ்களை பிரிட்டனில் பணியமர்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டனில் உள்ள வேல்ஸ் பகுதியில், சுகாதராரத்துறைக்கான நிதியை அரசுக்கு சொந்தமான தேசிய சுகாதார சேவை மையம் அளித்து வருகிறது. இதன் கீழ் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

இங்கு, 4,200 நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், 1,322 பேர் 51 வயதை கடந்துள்ள நிலையில், ஓய்வு பெறவுள்ளனர். எனவே, நர்ஸ்களை பணி நியமனம் செய்ய உள்ளூர் சுகாதார வாரியம் திட்டமிட்டுள்ளது.
பணி நியமனம்
இதற்காக, வெளிநாடுகளில் இருந்து 900 நர்ஸ்களை அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக நியமிக்கவுள்ளனர். இதன் முதல்கட்டமாக 2023 - 24ம் ஆண்டில், வெளிநாடுகளில் இருந்து 350 நர்ஸ்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு 48 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
இதில், கேரளாவை சேர்ந்த நர்ஸ்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே பணியாற்றும் நர்ஸ்களுக்கு ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.