பட்டப்பகலில் எம்.பி. கத்தியால் குத்தி கொலை - பிரிட்டனில் பயங்கரம்
பிரிட்டனில் பட்டப்பகலில் சர்ச்சில் எம்பி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இவரது கட்சியைச் சேர்ந்த டேவிட் அமெஸ் எசெக்ஸ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் தொகுதி மக்களை சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்பது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமையான நேற்று எசெக்ஸ் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பொது மக்களை சந்திப்பதற்காக வந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே டேவிட் அமெஸ் உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அங்கு இருந்த போலீசார் எம்பியை கத்தியால் குத்திய இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மறைவுக்கு இங்கிலாந்து அரசியல் கட்சித் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
முல்லைத்தீவில் காயமடைந்த நோயாளிக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்: ஆளுநருக்கு அவசரக் கடிதம் IBC Tamil
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு.. IBC Tamil