உடலில் அறைந்தால் ஓடிவிடும் நோய்; பெண் உயிரிழப்பு - சிக்கிய போலி டாக்டர்!
கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பைதா லஜின்
பைதா லஜின் (Paida Lajin) எனக் கூறப்படும் இந்த சிகிச்சை சீனாவின் மருத்துவ முறை. இதில், நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது.
இதன் மூலம் நோயாளியின் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற முடியும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், டேனியல் கார்(71) என்ற பெண் 2014ல் உடலில் அறையும் சிகிச்சை வகுப்பை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்ததும் உயிரிழந்துள்ளார்.
பெண் பலி
இவர், டைப்-1 டயாபடீஸ் நோய்க்கு மாற்று சிகிச்சை தேடி இதனை செய்துள்ளார். தற்போது, அந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிகிச்சை குறித்த புத்தகத்தை எழுதியவர் ஹோன்சீ ஜியாவோ( Heal Yourself Naturally Now).
இதில், சிகிச்சையின் பயன்களையும், ரத்தத்தில் உள்ள நச்சுகளை அகற்றி ரத்த ஓட்டத்தை எப்படி அதிகரிக்கலாம் எனவும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சையில் நோயாளிகள் தோல் சிவந்து போகும் அளவிற்கு அல்லது சிராய்ப்பு ஏற்படும் அளவிற்கு அடிக்க வேண்டும்.
இவரது சிகிச்சைக்கு அறிவியல் ரீதியாகவோ மருத்துவ ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை. பல மருத்துவர்கள் அவரை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.