7 நிமிஷம் தான்.. புற்றுநோய்க்கு ஊசி ரெடி - வரலாறு படைக்கப்போகும் நாடு!
புற்றுநோய்க்கு ஊசி கண்டறிந்த முதல் நாடு என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
புற்றுநோய்க்கு ஊசி
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு குணமடையவே முடியாது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் உலகிலேயே முதல்முறையாக இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை (NHS) எனப்படும் பொது சுகாதார அமைப்பு புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஊசியை கண்டறிந்துள்ளது.
இங்கிலாந்து சாதனை
இதனை எடுத்துக் கொண்டால் 7 நிமிடங்களில் வேலை செய்ய ஆரம்பித்து விடும் என்கின்றனர். தொடர்ந்து, இந்த ஊசியை அங்கீகரிக்க வேண்டும் என்று MHRA எனப்படும் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் NHS கோரியுள்ளது.
ஒப்புதல் அளித்துவிட்டால் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
இதன்மூலம் தீவிரம் மூன்றில் ஒரு பங்காக குறையும். இங்கிலாந்தை பொறுத்தவரை தர்போது ஆண்டுதோறும் 3,600 பேர் அடிஸோலிசூமாப் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது புற்றுநோய் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதால் இன்னும் பல பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.