வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை - 3 நாள் லீவு : ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்..!

unitedkingdom workinghours
By Petchi Avudaiappan Jan 18, 2022 04:56 PM GMT
Report

இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் பரிசோதனை முயற்சியில் செயல்படுத்தியுள்ளன. 

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வாரத்திற்கு 40 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையில், இந்தியாவில் குறைந்தது வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்து வருகிறது. அதுவே  கொலம்பியாவில் 47.6 மணி நேரமும், சீனாவில் 46 மணி நேரமும், துருக்கியில் 45.6 மணி நேரமும், மெக்சிகோவில் 44.7 மணி நேரமும், கோஸ்டாரிகாவில் 43.5 மணி நேரமும் வார வேலை நேரங்களாக நடைமுறையில் உள்ளது.

இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக வேலை நேரத்தை குறைப்பது குறித்து உலக நாடுகள் பரிசீலனை செய்து வருகிறது. அந்த வகையில் இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனங்கள் பரிசோதனை முயற்சியில் செயல்படுத்தியுள்ளன.

இதில் தொழிலாளர்கள் ஒரு வாரத்துக்கான 80% வேலையை பார்ப்பார்கள். அவர்களுக்கான 100% சம்பளம் வழங்கப்படும். அதுபோல 100 உற்பத்தித் திறனையும் கொடுக்க வேண்டும். அதாவது கொடுக்கும் நேரத்தில் ஆர்வமாக வேலையை பார்த்து வழக்கமாக கொடுக்கும் உற்பத்தித் திறனை கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒரு கண்டிஷன்.

இதனால் உற்பத்தித்திறன் மற்றும் பணியாளரின் நல்வாழ்வில் இது எது மாதிரியான வித்தியாசத்தை கொண்டு வரும் என என்பதை கண்டறியவே இந்த முறை தற்போது சோதனை செய்யப்படுவதாகவும், இந்த விதி அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.