புற்றுநோயுடன் போராடி அழகான குழந்தையை பெற்றெடுத்த பெண் - நெகிழ்ச்சி சம்பவம்

Cancer United Kingdom
By Nandhini Dec 17, 2022 01:58 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

புற்றுநோயிலிருந்து குணமடைந்த மற்றும் கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தம்பதியினர் "அதிசயம்" குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.

புற்றுநோயுடன் போராடி குழந்தை பெற்றெடுத்த பெண்

United Kingdomமைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் ஜெபர்சன்-லவ்டே. இவரது மனைவி பெத்தானி. இவர் 21 வார கர்ப்பமாக இருக்கும்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆனால், தம்பதியினர் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுக்க முயற்சி செய்து முடிவெடுத்தனர்.

கர்ப்பத்தின் 21 வது வாரத்தில் பெத்தானி மகிழ்ச்சியோடு இருந்தார். ஆனால், அவருக்கு புற்று நோய் இருப்பதை அறிந்தவுடன், அவளுடைய மகிழ்ச்சி விரைவில் சோகமாக மாறியது.

பெத்தானிக்கு தலைவலி, மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் காலர் எலும்பில் கடினமான கட்டியால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் இவை அனைத்தையும் மீறி, எதுவும் தவறு இல்லை என்று பெத்தானி குழந்தை பெற்றுக்கொள்வதில் உறுதியாக தன்னம்பிக்கையோடு இருந்தார்.

மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவரிடம் தனது அனைத்து சிகிச்சை முறைகளை கேட்டறிந்து அதன்படி நடந்து வந்தார். பெத்தானிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு சிசேரியன் செய்யப்பட்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர்.

பெத்தானிக்கு தற்போது ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்துள்ளது.   

uk-baby-after-battling-cancer