இங்கிலாந்து ராணியை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை

Sudesh Amman queen Elizabeth 2
By Petchi Avudaiappan Aug 03, 2021 07:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத்தை கொல்ல விரும்பிய நபரை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பெரும்பாலான நாடுகளில் மக்களாட்சி மலர்ந்த பிறகும் இன்னும் அரச குடும்ப நடைமுறைகள் பின்பற்றப்படும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்தியாவைப் போன்று அங்குள்ள நாடாளுமன்றத்தில் மேலவை, கீழவை என இருந்தாலும் ஒரு மசோதாவை தாக்கல் செய்ய ராணி இரண்டாம் எலிசபெத் கையெழுத்து என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.

இதனால் ராணி 2 ஆம் எலிசபெத் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ராணிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் இங்கிலாந்து காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து ராணியை கொல்ல விரும்பிய பயங்கரவாதி சுட்டுக்கொலை | Uk Attacker Killed Had Vowed To Kill The Queen 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தெற்கு லண்டன் பகுதியில் போலி தற்கொலை ஆடை அணிந்து 2 பொதுமக்களை கத்தியால் தாக்கிய 20 வயதாகும் இஸ்லாமிய வாலிபரான சுதேஷ் அம்மான் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகி இருந்தார்.

வெளியே வந்த அம்மான் ஐஎஸ் பயங்கரவாத குழுவில் இணைய ஆர்வம் காட்டியதோடு ராணி இரண்டாம் எலிசபெத்தை கொல்ல தான் ஆர்வமாக இருப்பதாகவும் இதற்காக தான் மனித வெடிகுண்டாக மாறத் தயார் என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சுதேஷ் அம்மான் இங்கிலாந்து சிறப்பு புலனாய்வு படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.