இங்கிலாந்தில் பீதியை கிளப்பும் புது வைரஸ், அச்சத்தில் பொதுமக்கள்

By Irumporai May 15, 2022 04:33 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

இங்கிலாந்தில் மேலும் இரண்டு நபர்களுக்கு மங்கி பாக்ஸ் எனும் அரிய வகை வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே,இங்கிலாந்தில் இருந்து சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற ஒருவருக்கு கடந்த மே 7 ஆம் தேதி இந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் தற்போது லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,தற்போது இங்கிலாந்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இரண்டு புதிய வழக்குகள் எங்கு,எப்படி பரவின என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும்,மேலும்,மங்கி பாக்ஸ் வைரஸானது மக்களிடையே எளிதில் பரவாது எனவும்,பெரும்பாலான மக்கள் சில வாரங்களில் குணமடைவார்கள்.

இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து மிகக் குறைவாகவே உள்ளது எனவும்,ஆனால் ஒரு சிலருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்றும் இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மங்கி பாக்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் போது இது பரவும்.குறிப்பாக,வைரஸ் உடைந்த தோல், சுவாசக் குழாய் அல்லது கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக உடலில் நுழையும் எனவும், மேலும்,காய்ச்சல்,தலைவலி,தசைவலி,முதுகுவலி,கடுமையான குளிர் மற்றும் சோர்வு ஆகியவை குரங்கு பாக்ஸின் ஆரம்ப அறிகுறிகளாகும்.

குறிப்பாக,முதலில் முகத்தில் தடிப்பு தடிப்பாக ஏற்பட்டு,பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு,குறிப்பாக கைகள் மற்றும் கால்களுக்கு பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி,தற்போது மங்கி பாங்ஸ் வைரஸ் காய்ச்சலுக்கு என குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை.

ஆனால்,பெரியம்மைக்கு எதிராக போடப்படும் தடுப்பூசி மங்கி பாக்ஸ் நோயைத் தடுப்பதில் சுமார் 85 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.