பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானர் : பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
இங்கிலாந்து ராணி எலிசபெத் உயிரிழந்தார். அவருக்கு வயது 96
ராணி எலிசெபத்
இங்கிலாந்து மகாராணியாக ராணி எலிசெபத். இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது 96 வயதாகும் நிலையில். இவருக்கு திடீரென இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வன மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில்இங்கிலாந்து மகாராணி எலிசெபத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது இங்கிலாந்து நாட்டினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் விரைவில் நலம் பெற வேண்டிய உலகத்தலைவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
எலிசெபத் காலமானர்
இந்த நிலையில் பிரிட்டன் ராணி எலிசபெத் (வயது 96) காலமானர்- பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. எலிசெபத் 70 வருடங்கள் பிரிட்டன் ராணியாக இருந்துள்ளார் இந்த தகவல் பிரிட்டன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் இரண்டாம் எலிசபெத். இவர், கடந்த 1952 முதல் பிரிட்டன் ராணியாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.