சட்டப்பேரவை தேர்தல்: உதயசூரியன் சின்னத்தில் எத்தனை தொகுதிகள்?
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் 172 தொகுதிகளில் களம்காண்கிறது உதயசூரியன்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, மநீக உட்பட 21 கட்சிகள் உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது, 28 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் வரை வழங்கலாம் என கூறப்படுகிறது, விசிக-வுக்கு 8 தொகுதிகளும், ஐயூஎம்எல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுவதால் 4 தொகுதிகளும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக பேரவை (தமிமுன் அன்சாரி), கொங்கு இளைஞா் பேரவை (உ.தனியரசு), முக்குலத்தோர் புலிப்படை (கருணாஸ்), புதிய திராவிடா் கழகம் (ராஜ்குமார்) உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் உதயசூரியன் சின்னத்தில் 172 தொகுதிகளில் களம்காண்கிறது திமுக, மற்ற 62 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட முடிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.