மீண்டும் ஷூட்டிங்கிற்கு கிளம்பும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்! ரசிகர்கள் ஆர்வம்!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்த ஆர்டிகிள் 15 ரீமேக்கின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் துவங்கவிருக்கிறது.

அரசியல் பணிக்கு இடையே சினிமா வேலையை செய்யவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்டிகிள் 15 இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் அருண்ராஜா காமராஜ்.
இது அவர் இயக்கும் இரண்டாவது படமாகும். முன்னதாக சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் மூலம் தான் அருண்ராஜா காமராஜ் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

ஆர்டிகிள் 15 ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்த பிறகு படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில் ஆர்டிகிள் 15 ரீமேக் ஷூட்டிங்கில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பணியில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் சினிமா வேலையை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.