கணவனை தேடும் மனைவி கதை - முதல்வரின் கதைக்கு உதயநிதி பதிலடி

Udhayanidhi Stalin St Joseph's Day Chief Minister of Tamil Nadu
By Manchu Jun 23, 2026 09:51 AM GMT
Report

சட்டசபையில் முதல்வர் விஜய் கூறிய குட்டி கதைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் கணவனை தேடும் மனைவி கதை என்று கூறியுள்ளார்.

முதல்வருக்கு உதயநிதி பதில்

இன்று சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய உங்க அப்பாவை எங்க காணோம் என்ற குட்டி கதைக்கு வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர், தற்போது முகநூலில் பதில் கொடுத்துள்ளனர்.

சட்டப்பேரவையில் இருந்து எதிர்கட்சி தலைவர் தனது உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் உரை: கடும் அமளி- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முதலமைச்சர் விஜய் உரை: கடும் அமளி- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மேலும் தனது முகநூல் பதிவிலும் தனது பதிலை அளித்துள்ளனர். உதயநிதி பதிவிட்டுள்ள பதிவில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

கணவனை தேடும் மனைவி கதை - முதல்வரின் கதைக்கு உதயநிதி பதிலடி | Udhayanithi Story Cm Vijay Wife

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.

முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.

கணவனை தேடும் மனைவி கதை - முதல்வரின் கதைக்கு உதயநிதி பதிலடி | Udhayanithi Story Cm Vijay Wife

எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.

ஆகவே, Actor Vijay என்பதை மறந்து, இனியாவது Chief Minister of Tamil Nadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.